டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து முதியவர் பலி

டெல்லி துவாரகா பகுதியில் இன்று மெட்ரோ ரெயிலின்முன் பாய்ந்து 67 வயது முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து முதியவர் பலி
Published on

புதுடெல்லி:

டெல்லி துவாரகா பகுதியில் இன்று மெட்ரோ ரெயிலின்முன் பாய்ந்து 67 வயது முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி துவாராகா பகுதியை சேர்ந்தவர், தீபக் சோப்ரா(67). இன்று காலை துவாரகா 12-வது செக்டர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்த இவர் சுமார் 8 மணியளவில் ரெயிலின் முன்பு ஆவேசமாக பாய்ந்தார். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக் சோப்ரா சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் துவாரகா 12-வது செக்டர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் வழியாக கடந்து செல்லும் ரெயில் சேவையில் சில நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com