தோகைமலை அருகே பட்டாசுகளை பதுக்கி விற்றவர் கைது

தோகைமலை அருகே பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தோகைமலை:

தோகைமலை அருகே சுக்காம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தோகைமலை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது, சுக்காம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (வயது 46) தனது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com