மேலூர் அருகே கால்வாயில் ஆண் பிணம்

மேலூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் பிணத்தை மீட்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே கால்வாயில் ஆண் பிணம்
Published on

மேலூர்:

மேலூர் பகுதியில் பெரியார் பாசன கால்வாய் பல்வேறு ஊர்களுக்கும் செல்கிறது. குறிச்சிபட்டி செல்லும் கால்வாயில் இன்று காலை ஆண் பிணம் மிதந்துள்ளது.

இதனை கண்டவர்கள் கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, ஏட்டு பரசுராமன் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தனியாமங்கலம் அருகே அந்த உடல் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆண் 30 வயது மதிக்கத்தக்கவர். அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. எனவே அவரை யாராவது அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாமா? அல்லது ஆற்றுக்குள் தவறி விழுந்து அவர் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com