அரக்கோணம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்- கொலை செய்யபட்டாரா?

அரக்கோணம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்- கொலை செய்யபட்டாரா?
Published on

அரக்கோணம்:

ஓச்சேரி அருகே உள்ள எரும்புலி பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் பின்புறம் வேஷ்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

இதனை கண்ட பொதுமக்கள் அவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவருக்கு 45 வயது இருக்கும் எனவும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா ? என்பது குறித்தும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com