நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலைய குடோனில் ஆண் பிணம்

தனியார் மின் உற்பத்தி நிலைய குடோனில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலைய குடோனில் ஆண் பிணம்
Published on

நெய்வேலி:

நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டாகா என்ற மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு மின்உற்பத்தி செய்ய தேவையான நிலக்கரி நெய்வேலி சுரங்கத்தில் இருந்து ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அங்கு நிலக்கரி சேமித்து வைக்க குடோன் ஒன்று உள்ளது.

இந்த குடோன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனியார் மின்உற்பத்தி நிலைய முதன்மை மேலாளர் சந்திரன், ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com