பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் இன்று மாற்றம்

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட ரெயில்களில் இன்று(சனிக்கிழமை) சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. #railservicechange
பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் இன்று மாற்றம்
Published on

சென்னை:

சென்னை சென்டிரல்-திருப்பதி (வ.எண்.16053) 2.15, (16203) மாலை 4.35, (16057) காலை 6.25, திருப்பதி-சென்டிரல்(16204) காலை 6.45, (16058) மாலை 6.05, (16054) காலை 10, மூர்மார்க்கெட்-அரக்கோணம் பிற்பகல் 3.50, அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 10.50 மணி மின்சார ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்டிரல்-அரக்கோணம்-சென்டிரல்(56001, 56002), அரக்கோணம்-செங்கல்பட்டு-அரக்கோணம்(56003, 56004, 56005, 56006), ஆவடி-மூர்மார்க்கெட்(66006), மூர்மார்க்கெட்-அரக்கோணம்(66021), அரக்கோணம்-திருப்பதி(66049) பயணிகள் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர்-தாதர் எகஸ்பிரஸ் இருமார்க்கம் (12164, 12163), சென்டிரல்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் இருமார்க்கம் (11042, 11041), மும்பை சி.எஸ்.எம்.டி.-சென்டிரல் மெயில்(11027) ஆகிய ரெயில்கள் திருத்தணி, அரக்கோணம் வழியாக வருவதற்கு பதிலாக திருத்தணி, சித்தேரி, அரக்கோணம் வழியாக செல்லும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #tamilnews #railservicechange

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com