எலெக்ட்ரிக் பதிப்பில் விரைவில் களமிறங்கும் மஹேந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500

மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம் விரைவில் ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500 மாடல்களின் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எலெக்ட்ரிக் பதிப்பில் விரைவில் களமிறங்கும் மஹேந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500
Published on

இந்திய சந்தைியில் மஹேந்திரா நிறுவனம் மட்டுமே எலெக்ட்ரிக் மாடல்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், மஹேந்திரா நிறுவனம் தனது பிரபல மாடல்களை எலெக்ட்ரிக் திறன் வழங்க திட்டமிட்டு வருகிறது.

முதற்கட்டமாக மஹேந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500 மாடல்களில் எலெக்ட்ரிக் வசதி வழங்கப்பட இருக்கிறது. எலெக்ட்ரிக் மாடல்களை தயாரிக்க ரூ.300 முதல் ரூ.400 கோடிகளை முதலீடு செய்ய இருப்பதாகவும், மஹேந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இன்ஜின்களை தயாரிக்கும் என்றும் எலெக்ட்ரிக் மாடல்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.   

வெரிட்டோ மற்றும் மினிவேன் மாடல்களில் எலெக்ட்ரிக் வசதியை மஹேந்திரா வழங்கியுள்ள நிலையில், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி. 500 எலெக்ட்ரிக் மாடல்களின் விலை டீசல் மாடல்களை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய எலெக்ட்ரிக் மாடல்களின் வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.

தற்சமயம் விற்பனையாகும் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டது. ஸ்கார்ப்பியோ இன்ஜினில் 120bhp செயல்திறன் மற்றும் எக்ஸ்.யு.வி. 500 மாடலில் உள்ள இன்ஜின் 140bhp செயல்திறன் கொண்டுள்ளது. ஸ்கார்ப்பியோ மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com