

மஹேந்திரா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ஸ்கார்பியோ மாடல் பலமுறை வலைத்தளத்தில் வெளியாகி வந்தது. இதுவரை வெளியீடு குறித்து மஹேந்திரா சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில் மஹேந்திரா ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கார்வாலே தெரிவித்துள்ளது.
ஸ்கார்பியோ ஃபேஸ்லிஃப்ட் பதிப்பின் வெளிப்புறங்களில் சில மாற்றங்களும் புதிய பம்ப்பர், புதிய கிரில் மற்றும் குரோம் இன்சர்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய காரின் பின்புறத்தில் புதிய டெயில் லேம்ப், சில மாற்றங்களுடன் கூடிய புதிய பம்ப்பர் கொண் டிருக்கும் என கூறப்படுகிறது.
பக்கவாட்டுகளில் ஸ்கார்பியோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இத்துடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். மேலும் இதன் இருக்கைகளில் புதிய நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஸ்கார்பியோ 2.2 லிட்டர் எம்ஹாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 140 Bhp மற்றும் 330 Nm செயல்திறன் கொண்ட இன்ஜின் இம்முறை அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் மஹேந்திரா XUV500 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் என்ட்ரி-லெவல் மாடலில் 2.5 லிட்டர் m2DICR இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட மாட்டாது என கூறப்படுகிறது.