ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் தொடங்கியது - துணை ஜனாதிபதி பங்கேற்பு

கோவை ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டங்கள் தொடக்கம்
ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டங்கள் தொடக்கம்
Published on

கோவை:

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இன்று மாலை முதல் நாளை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி விழாவை மிகவும் உற்சாகமாக கொண்டு செல்லும் வகையில், பல்வேறு இடங்களில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திலும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய சிவராத்திரி கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com