ரசாயன ஆலையில் தீ விபத்து -2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்து (கோப்பு படம்)
தீ விபத்து (கோப்பு படம்)
Published on

மும்பை:

மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டம்,  தேகு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இரவு ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாய்லர் வெடித்ததுபோன்ற வெடிச்சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அங்கு தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com