மகாராஷ்டிராவில் முதல்வர் வீட்டின் முன் மாநகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயற்சி

மகாராஷ்டிராவில் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முதல்வர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் முதல்வர் வீட்டின் முன் மாநகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயற்சி
Published on

நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியுரியும் ஊழியரை சில நாட்களுக்கு முன்னர் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் இன்று பிற்பகலில் அம்மாநில முதல்வர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவருடன் வந்த 4 சக ஊழியர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com