எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் வாலிபர் மரணம்- மாஜிஸ்திரேட்டு விசாரணை

எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #EsplanadePoliceStation
ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Published on

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com