உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஜாமின்

மதுரைக்கு சுற்றுலா விசா மூலம் வந்து விபசாரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைதான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
நீதிமன்றம்
நீதிமன்றம்
Published on

மதுரை:

உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நைமோவா ஜெசிமா (வயது 22) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்தார்.

பின்னர் அவர் போலியாக ஆதார் அட்டை தயார் செய்து இங்கேயே தங்கி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் அவரை கைது செய்தனர்.

2 மாதம் அவரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு உத்தரவிட்டது. 8 வாரங்களுக்கு பின்பு சம்பந்தப்பட்ட கோர்ட்டில் அவர் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com