சீர்மிகு, சிங்கார- வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னைக்கு இன்று 382-வது வயதாகும் நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
Published on

பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் நகரம்தான் சென்னை.

தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்ற இந்த சென்னை மாநகரம், ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது. இந்த பாரம்பரிய நகரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 382-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.

தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.

சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com