மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

மாதவரம்:

மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா. ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

கணவன்-மனைவி இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கேரளா சென்றனர். இந்த நிலையில் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் மாயமாகி இருந்தது.

சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து காரையும் திருடி சென்றிருப்பது தெரிந்தது.

போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றதும், அங்கு இருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை திருடியதும், வீட்டின் முன்பு நின்ற காரை திருடி சென்றதும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com