திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காதல் திருமணம் செய்த தச்சு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
Published on

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு காந்திநகரை சேர்ந்தவர் ரகுவரன் (வயது26). தச்சு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே சமீப காலமாக கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் நேற்றும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரகுவரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இரவு வீட்டின் சமையல் அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் ரகுவரன் தூக்குபோட்டு தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வளர்மதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரகுவரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ஜோசப் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com