சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களுடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காதல் ஜோடி
காதல் ஜோடி
Published on

கன்னங்குறிச்சி:

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா(24) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ராமதாஸ், பிரியா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி நங்கவள்ளியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. அதைத்தொடர்ந்து காதல் ஜோடியின் பெற்றோரை அம்மாபேட்டை மகளிர் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி(33). இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சர்மிளா(31) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் முரளி, சர்மிளா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டதுடன் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களுடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com