போச்சம்பள்ளியில் லாட்டரி விற்றவர் கைது

போச்சம்பள்ளியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து சந்தூர் செல்லும் சாலையில் உள்ள திருவயலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போச்சம் பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது போச்சம்பள்ளி அருகே உள்ள பாரண்டபள்ளி அடுத்த  ஒட்டப்பட்டி சேர்ந்த பெரியதம்பி (வயது 52) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து, 20 லாட்டரி சீட்டு மற்றும் 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைதான பெரியதம்பியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்ரை கிளை சிறையில்  அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com