சவூதி, எகிப்து நாடுகளை தொடர்ந்து கத்தாருடன் உறவை முறிக்கும் லிபியா

சவூதி அரேபியா, பக்ரைன், எகிப்து நாடுகளை தொடர்ந்து கத்தார் உடனான தூதரக உறவுகளை முறிப்பதாக லிபியாவில் உள்ள மூன்று போட்டி அரசாங்கங்களும் அறிவித்துள்ளது.
சவூதி, எகிப்து நாடுகளை தொடர்ந்து கத்தாருடன் உறவை முறிக்கும் லிபியா
Published on

சவூதி அரேபியா, பக்ரைன், எகிப்து நாடுகளை தொடர்ந்து கத்தார் உடனான தூதரக உறவுகளை முறிப்பதாக லிபியாவில் உள்ள மூன்று போட்டி அரசாங்கங்களும் அறிவித்துள்ளது.

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இன்று கூட்டாக அறிவித்துள்ளன. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தூதரக உறவை துண்டிப்பதாக தெரிவித்துள்ளன. அத்துடன் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களுக்கும் மேற்கண்ட நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டாதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட நாடுகளுடன் தற்போது லிபியாவும் இணைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com