

எல்ஜி நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த Q6 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. எல்ஜி Q6 பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. 5.5 இன்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி Q6 பிளஸ் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான எல்ஜி Q6 ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது.
இந்தியாவில் புதிய எல்ஜி Q6 பிளஸ் விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோ பிளாக் மற்றும் ஐஸ் பிளாட்டினம் நிறங்களில் கிடைக்கும் எல்ஜி Q6 பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே மட்டுமின்றி முகத்தை கொண்டு அன்லாக் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
எல்ஜி Q6 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x2160 பிக்சல் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 3000 எம்ஏஎச் பேட்டரி