ஆப்கானிஸ்தான் டெஸ்டா, கவுன்டி கிரிக்கெட்டா- விராட் கோலிதான் முடிவு செய்வார்- வினோத் ராய்

ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவதா அல்லது கவுன்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதா என்பதை விராட் கோலிதான் முடிவு செய்வார் என வினோத் ராய் கூறியுள்ளார். #INDvAFG
ஆப்கானிஸ்தான் டெஸ்டா, கவுன்டி கிரிக்கெட்டா- விராட் கோலிதான் முடிவு செய்வார்- வினோத் ராய்
Published on

கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து செல்லும்போது விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடினார். இதனால் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் உடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இந்தியா முன்னணி வீரர்களுடன் களம் இறங்க வேண்டும். விராட் கோலி இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகக்குழுவில் தலைவர் வினோத் ராய், விராட் கோலி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவதா, கவுன்டி போட்டியில் விளையாடுவதா என்பதை அவர்தான முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

‘‘டெஸ்ட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாகக்குழு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கவுன்டி போட்டியில் வீரர்கள் விளையாட உள்ளனர். ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்காக அவர்களை நிறுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com