குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு- இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட்டு
இந்திய கம்யூனிஸ்ட்டு
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கம்யூனிஸ்டு  (எம்.எல்.) சோசலிஸ்டு ஆகியவற்றின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொருளாதார வீழ்ச்சியை கண்டித்தும் இன்று சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்ïனிஸ்டு சார்பில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், கீதநாதன், ராமமூர்த்தி, அபிஷேகம், சுப்பையா, தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், சரளா, தனராமன், மார்க்சிஸ்டு சார்பில் பெருமாள், சீனுவாசன், கம்யூனிஸ்ட்டு (எம்.எல்.) சார்பில் மோதிலால்,சோசலிஸ்டு சங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com