இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியானது

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் வெலார் வெளியானது
Published on

மும்பை:

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேன்ஜ் ரோவர் வெலார் மாடலை லேண்ட் ரோவர் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் விலை ரூ.78.83 லட்சம் முதல் துவங்குகிறது. 2.02 4-சிலிண்டர் 132 KW டீசல், 2.01 4-சிலிண்டர் 184 KW பெட்ரோல் மற்றும் 3.01 V6 221 KW டீசல் என மூன்று வித இன்ஜின் ஆப்ஷன்களில் புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களுக்கு மத்தியில் புதிய ரேன்ஜ் ரோவர் வெலார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் அதிரடியான வடிவமைப்பு, ஃபாயில் ஸ்டேம்ப் செய்யப்பட்ட கிரில், எலிகண்ட் பக்கவாட்டுகள், ஸ்லீக் எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புற விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கவர்ந்திழுக்கும் வடிவமைப்புடன், ஃபிளஷ் டெப்ளாய் செய்யப்பட்ட டோர் ஹேன்டிள், இன்டகிரேட் செய்யப்பட்ட ரியர் ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளதால், சிறப்பான ஏரோடைனமிக் வசதி கிடைக்கிறது. பின்புற வடிவமைப்புகளில் குவாட் டெயில் லைட் மற்றும் ரேன்ஜ் ரோவர் வழங்கும் சிக்னேச்சர் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ரேன்ஜ் ரோவர் உள்புற வடிவமைப்பில் உறுதியான ஹாரிசான்டல் கோடுகள் அதிநவீன அம்சங்களுடன் ஒன்றிணைந்து அமைதியான மற்றும் தலைசிறந்த அனுபவத்தை ஓட்டுநருக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் விண்ட்ஸர் லெதர் , சிக்னேச்சர் கட் டைமண்ட் பேட்டர்ன் உள்ளிட்டவை காரின் உள்புற அழகை மேலும் வியக்க வைக்கிறது. 

இதன் நடுவே வழங்கப்பட்டுள்ள ட்வின்-ஸ்கிரீன், டச் ப்ரோ டுயோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெயின் கன்சோலில் இருக்கைகளுக்கு இடையே இரண்டாவது திரை வழங்கப்பட்டுள்ளது. வெலார் மாடலின் அதிநவீன, டார்கியூ-க்கு ஏற்ற ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துகிறது. உலகத்தரம் வாய்ந்த டிராக்ஷன் சிஸ்டம், டெரைன் ரெஸ்பான்ஸ் 2 மற்றும் ஆல்-டெரைன் பிராகரஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com