ஊராட்சி தலைவியை அவமரியாதை செய்தவர்களுக்கு கடும் தண்டனை- எல் முருகன் வலியுறுத்தல்

ஊராட்சி தலைவியை அவமரியாதை செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் எல் முருகன்
பாஜக தலைவர் எல் முருகன்
Published on

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் திட்டை ஊராட்சி தலைவி ராஜேஸ்வரி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்பட்டார். இப்போது ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டு, அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதை செய்வது ஜனநாயகத்தையும், சட்டத்தின் மாண்புகளையும் அவமதிப்பதாகும். இந்த குற்றங்களை செய்யக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com