குருவிகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

குருவிகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருவிகுளம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் குருவிகுளம் அருகே உள்ள செவல்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை விரட்டி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செவல்குளம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 40), முத்தையா மகன் முருகன் (32), முனியசாமி மகன் மரியராஜ் (34), ராசு மகன் கண்ணன் (31), மருதையா மகன் ராமச்சந்திரன் (35) என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த குருவிகுளம் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாதன் அவர்களை கைது செய்து, 500 ரூபாய் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com