கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை- புழல் சிறையில் கதறி அழும் அபிராமி

கள்ளக்காதலில் குழந்தைகளை கொலை செய்த அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சிறைக்கு சென்று பார்க்காததால் அழுது புலம்பி தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். #KundrathurAbirami
கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை- புழல் சிறையில் கதறி அழும் அபிராமி
Published on

சென்னை:

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த மாதம் 30-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடனான கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், 2 குழந்தைகளையும் பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றார்.

தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்தனர். புழல் சிறையில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.

அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார்.

அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர். இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார். #KundrathurAbirami

X

Maalai Malar
www.maalaimalar.com