இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் - மகரோவாவை வீழ்த்தினார் க்ருனிக்

இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த போட்டியில் செர்பிய வீராங்கனை க்ருனிக், ரஷ்ய வீராங்கனை மகரோவாவை வீழ்த்தினார்.
இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் - மகரோவாவை வீழ்த்தினார் க்ருனிக்
Published on

இஸ்தான்புல் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிர் ஒற்றை பிரிவில் செர்பியாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா க்ருனியும். ரஷ்யாவை சேர்ந்த எகடரினா மகரோவாவும் மோதினர்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய மகரோவா முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட க்ருனிக், இரண்டாவது சுற்றில் தனது அதிரடியை காட்டினார். இதனால் சுமார் 24 நிமிடங்களில் 6-1 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் க்ருனிக் மிகவும் சிறப்பாக ஆடினார். இதனால் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில், க்ருனிக் மகவோராவாவை 1-6, 6-1. 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். டென்னிஸ் தரவரிசையில் க்ருனிக் 53-வது இடம் பிடித்தவர் என்பது குறிபிடத்தக்கது. #Tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com