கொழிஞ்சாம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

கொழிஞ்சாம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பாலக்காடு:

திருப்பூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் சின்னன்(வயது 30). இவர் கொழிஞ்சாம்பாறை அருகே நல்லேபிள்ளி பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணியளவில் திருப்பூருக்கு புறப்பட்டார். நாட்டுக்கல் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த லாரி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தது என்பதும், நல்லேபிள்ளிக்கு கோழி தீவனம் கொண்டு வந்தபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது. மேலும் லாரியை ஓட்டி வந்தது ஆத்தூரை சேர்ந்த ஆறுமுகம்(58) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கொழிஞ்சாம்பாறை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com