கோயம்பேடு தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கோயம்பேடு தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் (கோப்புப்படம்)
நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on

போரூர்:

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (42). இவர் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு குடி போதையில் தொழிலாளிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்த் என்பவர் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு எழும்பூர் 18-வது கூடுதல் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கொலையாளி ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ10.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஜெகதீசன் ஆஜராகி வாதாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com