ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் சேதம்

சமீபத்தில் பெய்த பலத்த மழையால் கொசஸ்தலை ஆற்று பாலத்தின் அடியில் ரூ. 50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட பிளாட்பாரம் மீண்டும் சேதம் அடைந்தது.
ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கொசஸ்தலை ஆற்று பாலம் மீண்டும் சேதம்
Published on

ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சத்தியமூர்த்தி நீர்தேக்கம் உள்ளது. இந்த அணையின் உயரம் 35 அடி. 33231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

அணை ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீர் கொசஸ் தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

1965-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீரை அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அதிகபட்சமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒதப்பதையில் உள்ள பாலத்துக்கு அடியில் இருந்த பிளாட்பாரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை சீரமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சத்தை ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு கடந்த வரும் பிளாட்பாரம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு கொசஸ்தலை ஆற்றின் கிளை நதியான நெல்வாயல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீர் ஒதப்பை கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து சென்றது. இதனால் பாலத்தின் அடியில் ரூ. 50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட பிளாட்பாரம் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

பிளாட்பாரம் சீரமைக்க தரமான பொருட்கள் பயன்படுத்தாததே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதற்கு காரணம் ஆகும் என்று ஒதப்பை கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

சேதம் அடைந்த பிளாட் பாரத்தை உடனே மறுபடியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com