ராமநாதபுரம் மாவட்டம் கொடிநாள் வசூலில் சாதனை

ராமநாதபுரம் மாவட்டம் கொடி நாள் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள், தேநீர் விருந்து விழா கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது. 8 பயனாளிகளுக்கு 97 ஆயிரத்து, 239 ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டுப் பாதுகாப்புக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் படைவீரர்களின் மறுவாழ்விற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போரில் வீரமரணம் எய்திய படைவீரரின் குடும்பத்தினருக்கும் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் பொதுமக்கள் மனமுவந்து அளிக்கும் கொடிநாள் நிதி நன்கொடைகள் நல்ல பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

7.12.2016 முதல் 6.12.2017 உடன் முடிவடைந்த கொடி நாள் வசூலிற்கு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.37,34,500ஆகும். இதில் 6.12.2017 முடிய வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.44,22,000 (118 சதவீதம்) ஆகும்.

வர இருக்கும் கொடி நாள் 2017-வது ஆண்டுக்கு (7.12.2017 முதல் 6.12.2018முடிய) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ.41 லட்சத்து 8 ஆயிரம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் நடப்பாண்டில் 2-வது உலகப்போர் நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, போர்ப் பணியில் ஊக்க மானியம் என 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9 லட்சத்து 66 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இதை தொடர்ந்து, 8 நபர்களுக்கு ரூ.97,239 மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பேபி, கால்நடைப்பராமரிப்பு த்துறை இணை இயக்குநர் மோகன், மாவட்ட தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் மணிவண்ணன், முப்படை வீரர் வாரிய உபதலைவர் லெப்.கர்ணல், ஷேக் அப்துல் காதர், கமாண்டர் வைத்தியநாதன், நல அமைப்பாளர் சாகுல்ஹமீது உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com