

திருச்சி:
திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநகர செயலாளர் அன்பழகன் வரவேற்றார். அவைத் தலைவர்கள் அம்பிகாபதி, பேரூர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் அனைவரும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும். யாரும் தகுதியில்லை என்று போட்டியிடாமல் இருக்கக் கூடாது. கூட்டுறவு அதிகாரிகள் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். ஒன்றிய அளவிலான கிராமங்களில் போட்டியிட்டால்தான் மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு உதவியாக இருக்கும்.
அமைச்சர் செல்லூர் ராஜூக்கு தெரிகிற விஷயங்களை விட எனக்கு அதிகம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளருக்கு நிறைய பேர் போட்டியிடுவார்கள். ஆனால் தகுதி வாய்ந்தவர்களில் ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின் மட்டும் தான்.
வயதான பிறகு பலர் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களால் எப்படி செயல் பட முடியும். 26 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை தி.மு.க.வுக்கு சொந்த வாக்கு வங்கி உள்ளது. இது போல் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டுகளுக்கும் வாக்குகள் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனை தோற்படிப்பதிலேயே கவனமாக இருப்பார்.
நாம் யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் எந்த வகையில் ஓட்டு கேட்கிறார்களோ அதே வகையில் தி.மு.க.வும் ஓட்டு கேட்கும். 1989-ல் தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதே முறையில் வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நாம் ஒன்று பட்டு பாடுபட வேண்டும். ஓட்டு வாங்குகிற வேலையை மட்டும் பார்ப்போம். வருகிற 24, 25-ந்தேதிகளில் ஈரோட்டில் தி.மு.க. மண்டல மாநாடு நடக்கிறது. அதனை ஸ்தம்பிக்க செய்யும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க் கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பரணிகுமார், ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் குட முருட்டி சேகர், முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், இளைஞரணி ஆனந்த், மகளிரணி லீலாவேலு, பகுதி செயலாளர்கள் கண்ணன், மதிவாணன், காஜாமலை விஜய், மண்டி சேகர், மோகன் தாஸ்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிங்காரம், வாளாடி கார்த்திக், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன்னகர் ஜெரால்டு, சசி குமார், ஜாபர்அலி மற்றும் திருநாவுக்கரசு, தொழிற் சங் கம் சிவபெருமாள், குணசேக ரன்,
கொட்டப்பட்டு தர்மராஜ், இளங்கோ, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மூக்கன், ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவல்பட்டு விஜி, கதிர்வேல், தொழிலதிபர் ஜான்சன் குமார், பந்தல் ராமு, என். எஸ். கருணை ராஜா, துரை ராஜ், வட்டச் செயலாளர்கள் துபேல் அஹமது, சிவசக்திகுமார், ராமமூர்த்தி, புஷ்பராஜ், நாகராஜன், சந்திரன், பாலமுருகன் பி. ஆர்.பாலசுப்பிரமணியன், ராமதாஸ், குமரேசன், வக்கீல் ரெங்கன், வேலு, சுருளி ராஜன், கமால், மனோகர், நாகராஜன், மூவேந்திரன், கலைச்செல்வி, சில்வியா நெப்போலியன், என். ஜூனியர் நித்தியானந்த், துர்காதேவி, கோபால், தி.மு. ரங்கா, வரகனேரி ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும், வருகிற 24, 25-ந்தேதிகளில் நடைபெற இருக்கும் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டிற்கு திருச்சி வடக்கு தெற்கு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளாக பங்கேற்பது, கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடை பெறாமல் நேர்மையாக நடத்திட வேண்டும், தி.மு.க.வினர் அதிக அளவில் போட்டியிட்டு வெற்றியடைய பாடுபட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. #tamilnews