ஜோர்டான் மன்னர் அப்துல்லா இந்தியா வருகை - பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு

அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று புதுடெல்லிக்கு வந்தடைந்த ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை பிரதமர் நேரில் சென்று வரவேற்றார். #JordanKing
ஜோர்டான் மன்னர் அப்துல்லா இந்தியா வருகை - பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு
Published on

புதுடெல்லி:

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று இந்திய வந்தடைந்தார். புதுடெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இரண்டாம் அப்துல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும், தனது சுற்றுப்பயணத்தில் டெல்லி ஐ.ஐ.டி, இந்தியா - ஜோர்டான் பொருளாதார கூட்டு கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

வியாழன்று இந்திய இஸ்லாமிய மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு அப்துல்லா பேச இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு தனது மனைவியுடன் மன்னர் அப்துல்லா இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#JordanKing #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com