நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் கடத்தல்

நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவி உள்பட 4 பேர் கடத்தல்
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி மகள் முத்துபிரியா (வயது16). 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து 11-ம் வகுப்பு செல்ல உள்ளார். சம்பவத்தன்று பழனிச்சாமி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார்.

அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் குமரேசன் (26) என்பவர் முத்துபிரியாவை கடத்தி சென்று விட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குபதிவு அவர்களை தேடி வருகிறார்.

நிலக்கோட்டை அருகில் உள்ள கே.புதூரை சேர்ந்தவர் ஜமாத். இவரது மனைவி கஜிதா (28). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஜமாத் மகாராஸ்டிராவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கஜிதா தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் விசித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த கஜிதாவை அவரது குழந்தைகளுடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com