திண்டுக்கல் அருகே மனைவியை கடத்தி சென்ற வாலிபர் மீது புகார்

திண்டுக்கல் அருகே தனது மனைவியை கடத்திச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே மனைவியை கடத்தி சென்ற வாலிபர் மீது புகார்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மாமா மகள் சுதா (28) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

திருப்பூரில் வேலை பார்த்து வரும் ராஜேஷ்குமார் மாதத்துக்கு சில நாட்கள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியில் சோப்பு கம்பெனி நடத்தி வந்த ராஜேஷ் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவரவே சுதாவை கண்டித்துள்ளனர்.

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு சென்று விட்டனர்.

தனது மனைவியை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டுத் தர கோரி ராஜேஷ்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com