ஏரியூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

ஏரியூர் அருகே கல்லூரி மாணவியை கடத்திய 4 வாலிபர்கள் குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தல்
கடத்தல்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூரை அடுத்துள்ள ஏமனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது40). இவரது மகள் அகிலா (19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். கடந்த 14-ந்தேதி அன்று வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் அகிலா அந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் தனது மகளை பற்றி காவிரி ஆற்றங்கரையோர பொதுமக்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சந்திரசேகரிடம் பென்னாகரத்தை அடுத்துள்ள கடமடையை சேர்ந்த மாதையன் மகன் பிரபு, சின்னபையன் மகன் கார்த்திக், முனுசாமி மகன் ராஜுகாந்தி, கிட்டப்பன் மகன் சக்திவேல் ஆகிய 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் அகிலாவை கடத்தி சென்றார்கள் என்று கூறினர். 

இது குறித்து சந்திரசேகர் எனது மகள் அகிலாவை பிரபு, கார்த்திக், ராஜுகாந்தி, சக்திவேல் ஆகிய 4 பேர் சேர்ந்து கடத்தி சென்றிருக்கலாம் என்று ஏரியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com