வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #KhaledaZia #Khaledaadmitted
வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
 
ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com