கொடைக்கானலில் மசாஜ் சென்டர் நடத்திய கேரள வாலிபர் கைது

கொடைக்கானலில் தனியார் காட்டேஜில் அனுமதி இன்றி மசாஜ் சென்டர் நடத்திய கேரள வாலிபர் கைதானார்.
கொடைக்கானலில் மசாஜ் சென்டர் நடத்திய கேரள வாலிபர் கைது
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் பெர்ன்ஹில் சாலையில் உள்ள தனியார் காட்டேஜில் அனுமதி இன்றி மசாஜ் மையம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அனுமதி இன்றி மசாஜ் மையம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மசாஜ் மையம் நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த வாலிபர் சீனதேவ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எம்.எம். தெரு பகுதியில் கஞ்சா விற்றதாக கேரள மாநிலத்தை சேர்ந்த சனல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏரி சாலை பகுதியில் கஞ்சா விற்றதாக கேரளாவை சேர்ந்த ரதீஸ் என்பவர் கைதானார்.

இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com