சபரிமலைக்கு சென்ற 2 இளம்பெண்கள் தடுத்து நிறுத்தம்- திருப்பி அனுப்ப அமைச்சர் அறிவுறுத்தல்

சபரிமலைக்கு சென்ற இரண்டு இளம்பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதையடுத்து, அவர்களை திருப்பி அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். #SabarimalaTemple #SabarimalaProtest #Section144
சபரிமலைக்கு சென்ற 2 இளம்பெண்கள் தடுத்து நிறுத்தம்- திருப்பி அனுப்ப அமைச்சர் அறிவுறுத்தல்
Published on

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.

கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டபோதும் இளம்பெண்கள் கோவிலுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளிலேயே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன்பின்னர் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த தடை உத்தரவு டிசம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலை நோக்கி இரண்டு இளம்பெண்கள் இன்று காலையில் வந்துகொண்டிருந்தனர். அவர்களை அப்பச்சிமேடு பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலுக்கு செல்ல காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com