

சென்னை:
அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவது சிக்கன். சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுமார் 1 லட்சம் கிலோ கோழி விற்பனையாகிறது.
சிக்கன் விரும்பி வாங்குவதற்கு இன்னொரு காரணம் ஆட்டிறைச்சி கிலோ ரூ.650.
கடந்த சில நாட்களாக கோழிகள் வரத்து குறைந்துள்ளது. கோழி விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.160 (உயிருடன்) விற்பனையானது. உரித்தது ரூ.220-க்கு விற்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் மொத்த விலைக்கு கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இதனால் சில்லறை விலைக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டது.
இந்த விலை உயர்வுக்கான காரணம் பற்றி கோழி மொத்த வியாபாரி வில்லிவாக்கம் சுரேஷ் கூறியதாவது:-
கோழி உற்பத்தி குறைவு மற்றும் வரத்து குறைவுதான் காரணம்.
கேரளாவில் மாட்டிறைச்சி அதிகமாக விற்பனையாகும். தற்போது மாடுகள் வெட்ட தடை இருப்பதால் அங்கும் கோழி இறைச்சி விற்பனை சூடு பிடித்துள்ளது. பெருமளவு கோழிகள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் என்றார்.