திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே இறந்த தாய்

கேரளாவில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷீபா
ஷீபா
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகம் பகுதி ஆசாரிதரையை சேர்ந்தவர் சசிபாலன் (வயது 45). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷீபா (42). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

18 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைக்காக பல ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து கோவில் கோவிலாக சென்று விரதம் இருந்து மனம் உருகி சாமியை வேண்டினர். இந்நிலையில் ஷீபா கர்ப்பமானார். தம்பதி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். பிறக்கும் குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி குவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஷீபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அவரது கணவர் ஷீபாவை குமரகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். சுகபிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னர் ஷீபாவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. ஆபரேசன் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றார்.

குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் உடனே இங்குபேட்டரில் வைக்கப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மயக்கம் அடைந்த ஷீபாவுக்கு திடீர் ரத்தபோக்கு அதிகமானது.

உடனே ஷீபாவை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஷீபா பரிதாபமாக இறந்தார். 18 ஆண்டுகள் கழிந்து பெற்ற 2 குழந்தைகளை பார்க்காமலேயே ஷீபாவின் உயிர் பிரிந்ததை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தவறான சிகிச்சை மூலமே ஷீபா இறந்து விட்டதாக உறவினர்கள் குமரகம் போலீசில் புகார் செய்தனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com