கேரளாவில் மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ.வின் கணவர் தற்கொலை

கேரளாவில் மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ.வின் கணவர் ‘திடீர்’ தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு துயர முடிவு
தற்கொலை செய்து கொண்ட ஹரி
தற்கொலை செய்து கொண்ட ஹரி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காயங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பர் பிரதீபா. இவர் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் ஹரி (வயது 47).

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும் பிரதீபா- ஹரி ஆகியோர் விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஹரி நிலம்பூர் அருகே உள்ள சுங்க தாரா என்ற இடத்தில் மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அந்த பகுதியிலேயே வீடு எடுத்து வசித்து வந்தார்.

நேற்று ஹரி தனது அலுவலகத்திற்கு பணிக்கு செல்லவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் அலுவலகத்திற்கு வராததால் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அவருக்கு போன் செய்தனர். ஆனால் ஹரி போனை எடுத்து பேசவில்லை. இதனால் அவரை தேடி சில நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்றனர்.

அவரது வீட்டு கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு தூக்கில் ஹரி பிணமாக தொங்கினார்.

உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஹரி ஒரு கடிதம் எழுதிவைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் உருக்கமாக ஹரி எழுதியிருந்தார். மேலும் ‘எனது சாவுக்கு நான்தான் காரணம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com