காவேரிப்பாக்கம் அருகே வேன் மோதி தொழிலாளி பலி

காவேரிப்பாக்கம் அருகே வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

காவேரிபாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம், சொக்கலிங்கம் முதலி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மகன் சுரேஷ் (வயது 30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளில் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் திடீரென சுரேஷ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com