காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள அரிய வகை திருக்கை மீன்கள்

காசிமேடு மீனவர்கள் வலையில் 100 கிலோ எடையுள்ள அரிய வகை திருக்கை மீன்கள் சிக்கின. இந்த மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கை மீன்
திருக்கை மீன்
Published on

திருவொற்றியூர்:

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தேசப்பன் (வயது 35) என்பவர் உள்பட 10 மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விசைப்படகில் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தனர். அப்போது அவர்கள் விரித்த வலையில் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோ எடையுள்ள அரியவகை புள்ளி திருக்கை, குருவி திருக்கை மீன்கள் சிக்கின. இவை அரிய வகை மீன்கள் ஆகும்.

இந்த மீன்கள் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதிக விலைக்கு விற்பனையாவதாக கூறி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com