ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். #JammuKashmirAttack #KulgamPolicePostAttack
ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்று போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #JammuKashmirAttack #KulgamPolicePostAttack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com