காஷ்மீர் பிரச்சனை இரு தரப்பு விவகாரம் : மோடியுடனான சந்திப்பில் ட்ரம்ப் அறிவிப்பு

ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் மோடியும் இன்று சந்தித்து பேசினர்.
ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்
ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்
Published on

பைரியாட்ஸ் :

உலகத்தலைவர்கள் பங்குபெறும் ஜி 7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பைரியாட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.  இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினர் இல்லையென்றாலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதின் பேரில் பிரான்ஸ் சென்றார். மாநாட்டின்  இறுதி நாளான இன்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும்  பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அச்சந்திப்பின் போது,  அமெரிக்கா இந்தியா நாடுகளுக்கிடையேயான  நட்புறவு மற்றும் வர்த்தக உறவு மேம்படுத்துதல் பற்றி விவாதிக்கப்பட்டது. முக்கியமாக காஷ்மீர் விவகாரம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறி வந்த டிரம்ப் தற்போது காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விவகாரம். இதில் பிறநாடுகள் தலையிட தேவையில்லை. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றார்.

காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்  மற்றும் உயர்திகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com