கருவடிக்குப்பத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

கருவடிக்குப்பத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவடிக்குப்பத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி காஞ்சனா. இவர்களது மகன்கள் ஆனந்தராஜ் (வயது42), கண்ணதாசன் (37). இதில் ஆனந்தராஜிக்கு திருமணமாகி விட்டது. டிரைவர் வேலை செய்து வந்த கண்ணதாசன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாய் காஞ்சனாவிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கான முயற்சியில் காஞ்சனா ஈடுபடாததால் கண்ணதாசன் விரக்தியில் இருந்து வந்தார்.

இதனால் மனமுடைந்த கண்ணதாசன் நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் மின்விசிறியில் கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com