கரூரில் ஆக்கிப்போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது

கரூர் மாவட்ட பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி 6-ந் தேதி நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
கரூரில் ஆக்கிப்போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது
Published on

கரூர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான ஆக்கி லீக் போட்டி வருகிற 6-ந் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். 

மாவட்ட அளவில் தேர்வு பெற்ற அணிகள் மண்டல போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வீரர்கள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com