சர்வதேச பீடே செஸ்: கார்த்திக் வெங்கட்ராமன் முதல் சுற்றில் வெற்றி

சர்வதேச பீடே செஸ் லீக் ஆட்டத்தில் கார்த்திக் வெங்கட்ராமன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
சர்வதேச பீடே செஸ்: கார்த்திக் வெங்கட்ராமன் முதல் சுற்றில் வெற்றி
Published on

சென்னை:

7-வது செயின்ட் ஜோசப்ஸ் சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சோழிங்கநல்லூரில் உள்ள அந்த கல்லூரியில் நேற்று தொடங்கியது. செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.பாபு மனோகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 552 வீரர்கள் பங்கேற்றனர். முதல் நிலை வீரரான கார்த்திக் வெங்கட்ராமன் தொடக்க சுற்றில் சீனிவாசனை வீழ்த்தினார். மற்ற ஆட்டத்தில் முத்தையா, பிரசன்னா, ராம் எஸ்.கிருஷ்ணன், விக்ரம்ஜித், கணேஷ், உள்ளிட்டோர் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com