

கமுதி:
கமுதி, அபிராமம், கோவிலாங்குளம், பெருநாழி, மண்டலமாணிக்கம் பகுதிகளில் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்கர பாணி, சேது, கந்தசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடை யூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
தேவர் குருபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் டாஸ்மாக் கடை விற்பனை செய்யும் நேரம் தவிர கள்ள மார்க்கெட்டில் திருட்டுத்தனமாக இரவு 10 மணிக்கு மேல் பகல் 12 மணி வரை மது பாட்டில்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கஞ்சா விற்பனையும் அதிக அளவில் நடக்கிறது. மாணவர்களும், 20 வயதுக்கு உட்பட்டவர்களும் மது, கஞ்சா வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.